நீண்ட
நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு நல்ல எழுத்தாளரின் அறிமுகம் எனது சித்தப்பா அவர்களின்
மூலம் கிடைத்தது. இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின்
நம்பிக்கை நட்சத்திரம்
அவரின்
நினைவாற்றல் யாரையும் வியக்க வைக்கும். வாசிப்பு திறன் மற்றும் உழைப்பு இவரின் எழுத்தில் தெரிகிறது. அறம்,முன்சுவடுகள்,காந்தி,
புறப்பாடு,ஏழாம் உலகம், வெள்ளையானை இப்போது வெண்முரசு (இன்டர்நெட்-ல்) என்று என்னை முழுமையாக அவரது எழுத்துக்கள்
ஆக்ரமித்து கொண்டுள்ளன என்றால் மிகையில்லை. இவ்வளவு நாட்களாக படிக்க தவறி விட்டமே என்ற
வருத்தமே விஞ்சியுள்ளது. ஒவ்வொரு தொகுப்பும்
வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது.மிகுந்த மன எழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக
நம்மை கொண்டு செல்கிறது. வார்த்தை அலங்கரங்களிலில்லை. ஆனால், மனதில் ஊடுருவி
செல்கின்றது. நம் கண்முன்னே காட்சிகள் பறந்து விரிகின்றன. மறக்க முடியாத நினைவுகளை விட்டு செல்கின்றது.